ஞாயிறு, 24 ஜூலை, 2011

65 சபைகளில் 45 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி!: வடமாகாணத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் மொத்தமாக 18 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளது.

65 மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. வடமாகாணத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் மொத்தமாக 18 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஒரு உள்ளுராட்சி மன்றத்தை கைப்பற்றியுள்ளது. மாத்தரை – அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கான முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 19 ஆயிரத்து 566 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை வென்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 18 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஜே வி பி ஆயிரத்து 407வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை வென்றுள்ளது.
(மேலும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக