திங்கள், 4 ஜூலை, 2011

ஜெயலலிதாவுக்கு உத்தரவு கோடை நாடு எஸ்டேட் பாதையை 24 மணிநேரமும் திறக்கவேண்டும்

கொடநாடு எஸ்டேட் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொதுப் பாதையை 24 மணி நேரமும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க வேண்டும். அங்கு சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில்தான் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இங்குள்ள பாதையை கொடநாடு நிர்வாகம் மூடி விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு போக வேண்டியுள்ளது.

இதனால் இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பாதையை திறந்து விட உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து இன்று உத்தரவிட்டது.

மேலும், அந்தப் பாதையை 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க வேண்டும். அங்கு சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
SC has ordered Kodanadu estate management to keep open the road for 24 hrs. SC passed this order today on estate manager's appeal petition.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக