புதன், 13 ஜூலை, 2011

ஜாக்சன் சகோதரியை 1 லட்சம் டாலருக்கு மைக் டைசனிடம் விற்க முயன்ற கணவர்

லண்டன்: என்னுடன் இன்பம் அனுபவிக்க 1 லட்சம் டாலர் பணம் தருமாறும், அப்படித் தந்தால் என்னுடன் இன்பமாக இருக்கலாம் என்றும் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனிடம் தனது முன்னாள் கணவர் ஜேக் கார்டன் பேரம் பேசியதாக மறைந்த மைக்கேல் ஜாக்சனின் மூத்த சகோதரியான லாடோயா கூறியுள்ளார்.

ஜேக் கார்டனை விட்டு நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்து விட்டார் லாடோயா. கார்டனும் ஏற்கனவே இறந்து விட்டார். இந்த நிலையில் கார்டனிடம் தான் பட்ட சித்திரவதைகள், கொடுமைகளை ஸ்டார்ட்டிங் ஓவர் என்ற தனது சுயசரிதையில் விளக்கியுள்ளார் லாடோயா.

அதில் அவர் கூறுகையில், எனது கணவரிடம் நான் பட்ட சித்திரவதைகளை விவரிக்க வார்ததைகள் இல்லை. என்னை மைக் டைசனிடம் விலை பேசியவர் கார்டன். 1 லட்சம் டாலர் கொடுத்தால் என்னுடன் இன்பமாக இருக்கலாம் என டைசனிடம் கூறினார் அவர்.

இதை மைக் டைசன் எனது தாயார், தந்தை மற்றும் எனது நண்பர்கள் சிலரை அணுகி கார்டன் இப்படிப் பேசியதாக கூறினார். அதன் பிறகே கார்டனின் கொடூர மனம் எங்களுக்குப் புரிய வந்தது.

பிளேபாய் பத்திரிக்கைக்கு நான் இரண்டு முறை ஆபாசமான கோலத்தில் போஸ் கொடுக்கவும் கார்டன் கொடுத்த நிர்ப்பந்தம்தான் காரணம். என்னை ஒரு விபச்சாரியாகவே அவர் மாற்றி வைத்து விட்டார். எல்லா அசிங்கத்திலும் என்னை அவர் தள்ளி விட்டார். எனக்கு எதிராக எல்லாமே இருக்குமாறு பார்த்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் லாடோயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக