சனி, 23 ஜூலை, 2011

இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி: முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

குன்னூர், ஜூலை 22: குன்னூர் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ரகசியமாகப் பயிற்சி அளித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து, ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற 150-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இலங்கை ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு குன்னூரில் ராணுவ முகாம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குன்னூர் ராணுவ முகாமிற்கு அழைத்து சென்றனர்.  தகவல் அறிந்த "நாம் தமிழர்' கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளர் இரா.ஆனந்தராசு, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் து.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் குன்னூர் எம்.ஆர்.சி ராணுவ முகாமை முற்றுகையிடுவதற்காக மானெக்க்ஷப் பாலத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக