ஞாயிறு, 31 ஜூலை, 2011

நில மோசடிப் புகார் பிஷப் சின்னப்பா உள்பட 12 பேர் மீது

  சென்னை ஆர்ச்பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்ளிட்ட 12 பேர் மீ்து ஏழைகளுக்காக வழங்கப்பட்ட 257 கிரவுண்ட் நிலத்தை மோசடி செய்து விட்டதாக பெரும் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரை கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறையில் அது புகார் கொடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் டி மாண்டி. இவர் ஏழை, எளிய மக்களுக்காக தனக்குச் சொந்தமான 257 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்த இடம் உள்ளது. இந்த இடத்தை கத்தோலிக்க திருச்சபை தன் வசம் வைத்துள்ளது. இந்த இடத்தை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார், எம்.ஜி.எம். மாறன் உள்ளிட்ட 12 பேர் முறைகேடாக அபகரித்துள்ளதாக கத்தோலிக்க விசுவாசிகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் அது புகார் கொடுத்துள்ளது.

இந்தப் புகார் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்புப் புகார்கள் பெருமளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சியினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் குவிகிறது என்றால் தற்போது சென்னை பிஷப் மீதும் நில அபகரிப்புப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக