புதன், 15 ஜூன், 2011

நடிகை கனகா Vs ஆவி அமுதா வழக்கு தள்ளி வைப்பு!

சென்னை: சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பிய நடிகை கனகா - ஆவி அமுதா வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ஆவி அமுதா. இவர், இறந்தவர்களின் ஆவியுடன், சம்பந்தப்பட்ட உறவினர்கள் பேசுவதாகக் கூறி, அதற்கென மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தனது தாயார் தேவிகாவின் ஆவியுடன் பேசுவதற்காக ஆவிஅமுதாவை நடிகை கனகா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் முத்துக்குமார் என்பவருக்கும், கனகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் முத்துக்குமார், கனகாவை விட்டு மாயமாகிவிட்டார்.

ஆவிஅமுதாதான் முத்துக்குமாரை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கனகா குற்றம் சாட்டினார்.

தனது மீது அவதூறு செய்தியை பரப்பி, பெயருக்கு களங்கம் விளைவித்த கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் ஆவிஅமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நேற்று நடந்தது. கனகா மற்றும் ஆவிஅமுதா இருவரும் நேற்று சைதை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம்தேதிக்கு தள்ளி வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

English summary
Saidapet Magistrate court postponed the defamation case filed by Aavi Amutha against actress Kanaga yesterday to July 27th.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக