சனி, 25 ஜூன், 2011

Micheal Jackson கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல்

New York: யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவது அதன் மதிப்பை வலியுறுத்துவதாக அமைகிறது. அதுபோல, அதற்கு நிகரான மதிப்பு மிக்க மனிதர்கள் இவ்வுலகில் இறந்தும் அவரது ரசிகர்கள் நெஞ்சில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக, பாப் இசை உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனை கூறலாம். மைக்கேல் ஜாக்சன் என்றால், அவரது துள்ளலான இசையுடன் கூடிய நடனம், அதற்கு வளைந்து நெளிந்து கொடுக்கும் அவரது உடல்வாகு உள்ளிட்டவை நமக்கு ஞாபகம் வருவதைப் போன்று, அவரை நினைத்தாலே, அவரது இசை மற்றும் நடனம் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.
அத்தகைய நீங்கா புகழை பெற்ற பாப் உலகின் முடிசூடா மன்னாக விளங்கிய பாடகர் மைக்கேல்ஜாக்சன் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும் அவரின் ரசிகர்கள் அவரை மறக்கவும் இல்லை. சொல்லப்போனால் மறக்க தயாராகவும் இல்லை. இதனால் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் இன்று கொண்டாடி வருகின்றனர். லாஸ்ஏஞ்சல்சில் உள்ள அவர் சமாதியில் திரளாக கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மைக்கேல் ஜாக்சன் மறைவு என்ற அதிர்ச்சியிலிருந்து அவரது ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜாக்சனின் சகோதரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அவரது சகோதரி லா டோயா தெரிவித்திருப்பதாவது: ஜாக்சன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தன்னை யாரோ கொலைசெய்ய முயற்சி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மைக்கேல் ஜாக்சனுக்கு சிகிச்சையளித்த டாக்டர் தோமேதோமே தான் ஜாக்சன் உடன் இறுதிவரை வியாபார ஆலோசகராக வும் இருந்துள்ளார். தற்போது அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது அவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவருடன் இருந்த சில நண்பர்களும் ஜாக்சனின் சம்பாத்தியத்தில் பலன்பெற்றுள்ளனர் என்றும் லா டோயா தெரிவித்துள்ளார்.

மக்கள் எந்த அளவிற்குஜாக்சன் மீது அன்பு செலுத்தியிருக்கின்றனர் என்பது அவர் இறப்பிற்கு பின்னர் அவருடைய அறையில் கிடைத்த சில குறிப்புகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக லா டோயா தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜாக்சன் இறப்பு குறித்து இறப்பு குறித்த எந்தவித தடயமும் குடும்பத்தினர் கைவசம் வைத்திருக்க வில்லை. எனவே ஜாக்சனின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக