ஞாயிறு, 12 ஜூன், 2011

Ex.CM குமாரசாமி- குட்டி ராதிகா :குழந்தை!



கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, கன்னட நடிகை குட்டி ராதிகாவுடன் சுற்றுவதாக ஏற்கனவே தகவல் வந்தன. குட்டி ராதிகா இயற்கை, வர்ணஜாலம் உள்பட சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், 1 1/2 வயதில் ஷமிகா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குமாரசாமி நடிகை ராதிகா மற்றும் குழந்தையுடன் இருக்கும் படமும் வெளியிடப் பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு குறித்து குமாரசாமியிடம் கேட்ட போது அதை மறுக்க வில்லை. இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம் என்று கூறினார்.


எனவே அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டது ஏற்கனவே உருதியானது. குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்பு இருந்துள்ளது. அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தார். குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமா உலகுடன் தொடர்பு உண்டு.

அவரது சொந்த ஊரான ஹசனில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்துள்ளார். படங்களை வினியோகம் செய்ததுடன், ஒரு படத்தையும் அவர் தயாரித்து உள்ளார். அப்போது தான் ராதிகாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

குமாரசாமிக்கு ஏற்கனவே அனிதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால் குமாரசாமி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு அனிதா தரப்பிலோ? தந்தை தேவே கவுடா தரப்பிலோ பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிய வில்லை.

குமாரசாமிக்கு நடிகை ராதிகா 2-வது மனைவி ஆகி இருப்பது போல, ராதிகாவுக்கு குமாரசாமி 2-வது கணவர் ஆவார். ராதிகா ஏற்கனவே ரத்தன்குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இந்த திருமணம் நடந்தது.

2002-ம் ஆண்டு ரத்தன்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் பின்னனிகுறித்து காரணம் இதுவரை தெரியவில்லை. அதன் பிறகுதான் குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் புகழின் உச்சகட்டத்தில் இருந்தபோது 2005-ம் ஆண்டு திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ராதிகா 1 1/2 வருடத்துக்கு முன்பு குழந்தை பெற்றபோது இந்த விஷயம் வெளியே கசிய ஆரம்பித்தது. அப்போது ராதிகாவிடம் உங்கள் கணவர் யார் என்று கேட்டதற்கு “ஒரு அரசியல் வாதி” என்று மட்டும் சொன்னார். பெயரை சொல்ல மறுத்துவிட்டார். இப்போது அது குமாரசாமி என்பது உறுதியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக