புதன், 22 ஜூன், 2011

ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்

தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார்.

37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது. 2007ம் ஆண்டு அவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோராகும் நாளை அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதுதொடர்பாக பல்வேறு விதமான தகவல்களும் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்திருப்பதாக அவருடைய மாமனார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமிதாப் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார் அமிதாப்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 2843 டி்விட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார் அமிதாப்.

எப்போது குழந்தை பிறக்கும் என்பது குறித்த செய்தியையும், ஐஸ்வர்யாவுக்கு இப்போது எத்தனையாவது மாதம் என்பதையும் அமிதாப் கூறவில்லை.

ஐஸ்வர்யாவைப் போல அழகான குழந்தை பிறக்க வாழ்த்துவோம்.

English summary
Bollywood star Aishwarya Rai is pregnant, her father-in-law and legendary actor Amitabh Bachchan has revealed on a micro-blogging site. Rai is married to actor Abhishek, Mr Bachchan's son. This will be the couple's first baby. "News news news!! I am going to become a grandfather. Aishwarya expecting. So happy and thrilled," Mr Bachchan tweeted on Tuesday night.
இதோ நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி பாரத புண்ய நாடு இனி தன பழைய பெருமைகள் அனைத்தையும் மீட்டுவிடும். பச்சன் குடும்பம் பரம்பரையாக  இந்தி திரை உலகை monopoly   பண்ண  அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது  இனி அடுத்த தலை முறை இந்தி ரசிகர்களும் இக்குடும்ப மசாலாவை  முழுங்க பாக்கியம் கிடைத்துவிட்டது.  சேரி ஜனங்களும் இதர பாலிவுட் ரசிக மகா ஜென்மங்கங்களும் லட்டு கொடுத்து கொண்டாடாடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக