பாராளுமன்ற உறுப்பினர்களின் மொழித்திறனை விருத்தி செய்வதற்காக தமிழ்மொழி பயிற்சி பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். பயிற்சி நெறியானது பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும். தேசிய மொழி மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தமிழ்மொழி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பாடநெறியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேருக்கு முதற்கட்டமாக பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ மபநவ