ஞாயிறு, 19 ஜூன், 2011

ஜனாதிபதி ரஷ்யா சென்றடைந்தார்


ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பேர்க் நகரில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அங்கு சென்றடைந்தார். சென் பீட்டர்ஸ் பேர்க் நகரின் புல்கோவோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சென் பீட்டர்ஸ்பேர்க் பிரதி ஆளுநர் செர்களாஸ் அஸெக்ஸி ஜவனோவிச் வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ் விஜயத்தின் போது ரஷ்யா, சீன ஜனாதிபதிகள் உட்பட பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக