வியாழன், 23 ஜூன், 2011

ஆடைகளால் கைகளைக்கட்டி பின்னர் கொல்வது விடுதலைப்புலிகளின் வழிமுறைகளில் ஒன்று,

விடுதலையும் தீவிரவாதமும்
- ராஜ புத்திரன்
போராட்டத்தின் நிகழ்வுகளை, விடுதலையோடும் தீவிரவாதத்தோடும் குழப்பிக் கொண்டுள்ள நிலையில், முக்கியமான சில நிகழ்வுகளை அவை விடுதலையின் பண்புகளைவிட்டும் வெகு தூரத்தே சென்றுவிட்டதை விளக்கும் நோக்கில், இறுதியாக நடந்த யூத்தத்தினை மையப்படுத்தி சில விடயங்களை அறிவுபூர்வமாக ஆராய்வது இத்தொடரின் நோக்கம்.
கடைசி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள், என்பது சர்வதேச ரீதியில் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. இக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றவர்களின் கோணத்திலிருந்தே அணுகலாம். அதாவது சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் இது முற்றிலும் தவறு அத்துடன் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள் இவை இரண்டினையும் அடிப்படையாகக் கொண்டுதான் ஏனைய யுத்தமீறல்கள் என்று சொல்லப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
எல்.ரி.ரி.ஈ இயக்கம் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாக இருந்திருந்தால் சிலசமயம் இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஓரளவு நியாயமானவை என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் விடுதலைப் போராட்ட இயக்கமொன்றின் அனைத்துப் பண்புகளையும் விட்டு மிகவும் தூரத்தே சென்றுவிட்ட ஒரு தீவிரவாத அமைப்புதான் விடுலைப்புலிகள் இயக்கம் என்பதற்கு அவர்களின் நடவடிக்கைகளே சாட்சி. தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவிப் பொதுமக்களை விடுதலைப்புலிகள் கனிசமானளவு கொன்று குவித்திருக்கின்றார்கள். அநுராதபுர விகாரையில் சிங்கள மக்களையும், காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம் மக்களையும் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கொன்ற இவ்வியக்கம் எப்படி விடுதலை இயக்கமாக இருக்க முடியும்? 2008ஆம் ஆண்டு வாகரையில் இடம்பெற்ற ஒரு அரச நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற காரணத்தக்காக கோயில் பூசாரி கொள்ளப்பட்டார். 2004இல் நாவலப்பிடியில் பள்ளிவாசல் முஅத்தின் மண்வெட்டியால் வெட்டிக் கொல்லப்பட்டார். அது போலவே பல பிக்குகளும் கொல்லப்பட்டார்கள். அத்துடன் பெளத்தர்களின் புனிதத் தளமான தலதாமாளிகை தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குட்பட்டது. அதே போல் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் 1990களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் அங்குள்ள பெரும்பாலான பள்ளிவாசல்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதுடன், சில பள்ளிவாசல்கள் பயிற்சி முகாம்களாகவும் எல்.ரி.ரி.ஈ யினரால் பயன்படுத்தப்பட்டன. பமியான் சிலைகளை குண்டு வைத்துத் தகர்த்த தலிபான் தீவிரவாத அமைப்புக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இந்தவிடயத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. தலிபான் தீவிரவாத அமைப்புக்கெதிராக எடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளையும் உலகம் சரிகாண்கிறது. அப்படியானால் எல்.ரி.ரி.ஈ தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் மிகச்சரியானதுதான்.
1990ஆம் ஆண்டு ஜுன் 10ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் இருந்த பொலிஸார் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். பெரும்பான்மையான பிரதேசங்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டது. பொலிஸாரின் உயிர்களைப் பாதுகாக்க, அப்போதய ஜனாதிபதி அதிமேதகு ஆர். பிரேமதாஸ அவர்களின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு பொலிஸாரை புலிகளிடம் சரணடையச் சொல்கிறது. தமது உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று அவர்களும் ஆயூதங்களைக் கீழே வைத்துவிட்டு எல்.ரி.ரி.ஈ யிடம் சரணடைந்தார்கள். அவர்கள் உடுத்தியிருந்த உடைகளாலேயே கைகள் பின்னால் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு குளிர்பாணம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சரணடைந்த 600 பொலிஸாரும் சுட்டக் கொல்லப்பட்டார்கள். உடுத்தியிருக்கும் ஆடைகளால் கைகளைக்கட்டி பின்னர் கொல்வது விடுதலைப்புலிகளின் வழிமுறைகளில் ஒன்று, ஏனெனில் 2004ஆம் ஆண்டு கிண்ணியாவில் மூன்று அப்பாவி முஸ்லிம் விவசாயிகள் அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளாலே கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டு வயல் வெளியில் போடப்பட்டார்கள். புலிகள் செய்த இந்தக் கொடூரமான படுகொலைகளின் பின்னர் புலிகள் அமைப்பு விடுதலை அமைப்புத்தான் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? 2004இல் கருணா அம்மான் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற போது அவருடன் இருந்த உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் வெருகலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். அனைத்துப் பெண் உறுப்பினர்களும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்கள். இதை உலகம் கண்டிக்கவுமில்லை கண்டுகொள்ளவுமில்லை.
எது எப்படிப் போனாலும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் இந்த தேசத்தின் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள் விடுதலைப்புலிகளின் தயவில் சுகபோக வாழ்வு அனுபவித்தவர்களும், புலிகளின் அழிவினால் இலாபமிழந்தவர்கள் மட்டுமே தமது நலன்கள் விடுபட்டுப் போனமைக்காக கவலைப்படுகின்றார்கள். விடுதலைப் புலிகள் என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆயுத விநியோகம் செய்து இலாபம் கண்டவர்கள் தமது வியாபாரம் தடைப்பட்டமைக்காக இன்னொரு தீவிரவாத அமைப்பை இந்நாட்டில் உருவாக்கி, அவர்களுக்கு தமது ஆயதங்களை விற்பதற்காக கழிவிரக்கம் கொண்டு, சர்வதேச அளவில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புகளுக்கு உந்துதல் அளித்து போர்க் குற்றங்களை விசாரித்தல் என்ற போர்வையில் கூப்பாடு போடுகின்றார்கள். எவர் எதைக் கூறினாலும், எவர் எதைச் செய்தாலும், இந்த தேசத்து மக்கள் தெளிவாக இருக்கும் வரை இன்னொரு தீவிரவாதம் இங்கு தலையெடுக்காது.
நன்றி: விடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக