வியாழன், 16 ஜூன், 2011

ஆட்சி மாற்றமே விஜய்யாலதான்! - சீமானின் 'கண்டுபிடிப்பு'

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததற்கு யார் காரணம்? இந்த கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்மீது மக்கள் கொண்ட நம்பிக்கைதான் அதிமுக ஜெயிக்கக் காரணம் என்று ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் நான்தான் காரணம் என்று சீமான் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்போது மூன்றாவதாக இன்னொரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார் அதே சீமான். இந்த ஆட்சி மாற்றத்துக்குக் காரணமே விஜய்தான் என்கிறார் அதிரடியாக.

சென்னை பிவிஆர் சினிமாவில் நேற்று நடந்த ஒரு சினிமா விழாவில்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை அவர் சொன்னார்.

பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சல்மான்கானும் விஜய்யும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

சீமானும் விழாவில் பங்கேற்றார். அவர் மைக் பிடித்ததுமே, வந்திருந்தவர்கள் சீரியஸாக பேச்சை கேட்க ஆரம்பிக்க, அவரோ காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டார்.

சீமான் பேசுகையில், "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று கூற, கூட்டத்தில் சிரிப்பொலி. 
அய் அய் யோ சீமானுக்கு விஜயின் மீது ஏன் இந்த கோபம். தான் உண்டு தன் கல்லாப்பெட்டி உண்டு என்று இருந்த விஜயை சும்மா கொம்பு சீவி விடுகிறார். அம்மாவின் காதில் இது விழுந்தால் விஜய்க்கு ஏழரை ஆரம்பம்.

கடந்த தேர்தலின்போது, கடைசி வரை யாருக்கு தனது ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவிக்காதவர் விஜய். விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கம் மட்டும்தான் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளன. விஜய் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார், ஆதரவாக அறிக்கையும் தரமாட்டார் என அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இரு மாதங்களுக்கு முன் பிரஸ்மீட் வைத்து சொன்னது நினைவிருக்கலாம்.

தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகே சந்தித்தது நினைவிருக்கலாம்!

English summary
Naam Tamilar president and director Seeman told that actor Vijay is the predominant reason for the change in Tamil Nadu rule. He told this in a film's audion launch function held at PVR cinema, Chennai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக