செவ்வாய், 7 ஜூன், 2011

பூஜா! சீமானுக்கு மேலும் சிக்கல்!!புகார் சொல்லப் போகிறார்



Latest news about Seemanடைரக்டர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து, அந்த புகார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை பூஜாவும் சீமான் மீது புகார் சொல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீமான் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் டைரக்டர் சீமான் மீது கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமி அதிரடி புகார் ஒன்றை குறிப்பிட்டார். போலீசில் அவர் அளித்த புகார் மனுவில், டைரக்டர் சீமான் மூன்று ஆண்டுகளாக காதலித்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுப்பதாக, கூறப்பட்டிருந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும் இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து ‌பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக