திங்கள், 20 ஜூன், 2011

சிக்கலில் பிரசாந்த் படம்!அரசியல் நிலவரம் இப்படி தலைகீழாக

பொன்னர் சங்கர் படம் எடுத்த போது, தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் இப்படி தலைகீழாக மாறிப் போகும் என படத்தின் இயக்குநர் தியாகராஜனோ அல்லது அவரது மகன் பிரசாந்தோ நி்னைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு இயக்குநராக தியாகராஜனுக்கு பொன்னர் சங்கர் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தாலும், பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட்டது படம். காரணம், அது கருணாநிதி வசனம் எழுதியது என்பதுதான் என இப்போது மேடைபோட்டுக் கூவி வருகிறார்கள் சிலர். ஆனால் இவர்கள்தான் பொன்னர் சங்கர் மேடையில் கருணாநிதி கதை வசனத்தைப் புகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரசாந்த் நடித்து, தியாகராஜன் இயக்கியுள்ள மற்றொரு படமான மலையூர் மம்பட்டியான் ரிலீசுக்கு தயாராக நிற்கிறது.

இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியுமா என திரையுலகமே தியாகராஜனைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் முன்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து, கடந்த ஆட்சியின்போது கருணாநிதி முகாமுக்குப் போனவர் தியாகராஜன்.

ஆனால், அவரோ எது பற்றியும் கவலைப்படாமல் படத்தை வெளியிடுவதில் குறியாக உள்ளார். விஷயம் கேள்விப்பட்ட பிறகு, சில விநியோகஸ்தர்கள் தாங்களாக தியாகராஜனை தொடர்பு கொண்டு வியாபாரம் பேசினார்களாம்.

"எனக்கு எந்த பயமும் தயக்கமும் இல்லை. அரசியல் நிலைப்பாடு வேறு. ஒரு கலைஞனாய் ஆட்சியாளர்களின் தயவை நாடும் சினிமா உலகில் நானும் ஒருவன். ஆட்சிக் கெதிராக நான் எதிலும் ஈடுபடாத போது, என் படத்தை எதற்கு தடுக்கப் போகிரார்கள். படம் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக