சனி, 11 ஜூன், 2011

முட்டைய நிறுத்த போறாங்க,பசங்க மந்தமாயிடறாளாம்

Swine Flu
‘‘எல்லாம் நல்ல விஷயந்தான்... சீட் கிடைச்சுடுத்து... எல்கேஜி சீட் வாங்கறதுக்கு என்ன போராட்டம்...’’ என்றாள் ப.வீ.தோழி. ‘‘எம்மெல்லே சீட் கூட கிடைச்சுரும்... நல்ல ஸ்கூல்ல எல்கேஜி சீட் கிடைக்கறது கஷ்டம்தான்...’’ என்று கமென்ட் அடித்தார் பீட்டர் மாமா. ‘‘அதை விடுங்கோ மாமி... ஸ்கூல்ன்னதும் தான் ஞாபகம்... உங்க டிபார்ட்மென்ட் விவகாரமாச்சே... சத்துணவுல ஏதோ சேஞ்ச் வரப் போறதா பேசிண்டாளே... உண்மையா...’’ என்று விசாரணையில் இறங்கினாள் சுசி மாமி.

‘‘ஆமாமா... வாரத்துக்கு 5 முட்டை போட்டா இல்லியா... இப்போ அதை நிறுத்தறதா முடிவு செஞ்சிருக்கா.. அவிச்ச முட்டை சாப்பிட்டா பசங்க மந்தமாயிடறாளாம்... அதனால முட்டைக்கு பதிலா காய்கறிகளை அதிகமா சேக்க போறதா சொல்றா... போன வாரம் டிஸ்கஷன் நடத்தினா... முடிவு வரல... டீச்சர்சை அழைச்சு சொல்லிட்டாளாம்... கண்டிப்பா முட்டை கிடையாதுனு... அவா அப்செட்... பேரன்ட்ஸ் சைட்ல எதிர்ப்பு வருமோனு யோசிக்கறா...’’ என்று தோழி விவரித்தார்.

‘‘ஸ்கூல் திறந்த பின்னதான் ரீயாக்ஷன் தெரியும்... இதுதொடர்பா சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவா இன்னிக்கு கூடி பேசறாளாம்... போராட்டம் அறிவிப்பா போல...’’ என்றாள் சுசி மாமி. ‘‘அதெல்லாம் சரி சுசீ... உங்காத்துக்காரருக்குதான் நிறைய பேரை தெரியுமே... அரசு வக்கீல் போஸ்டிங் ஏதாவது வாங்கி தரப்படதோ... என் ஹஸ்பண்ட்டும் யாரையெல்லாமோ பாத்துண்டு இருக்கார்...’’ என்று கேட்டார் தோழி.

‘‘இதோ இங்கதான இருக்கார்... நீங்களே கேளுங்களேன்...’’ என்று சுசி மாமி சொல்ல, பீட்டர் மாமா சிரித்தபடியே சொன்னார்... “அமைச்சர் பதவிக்கு கூட அவ்வளவு போட்டியில்ல மாமி... அரசு வக்கீலாகறதுக்குஅடிதடியே நடக்குது... ஹவுசிங் போர்டு இருக்கே... அதுக்கு லீகல் ஆபீசர் போஸ்டிங் இருக்கு... அந்த பதவிய பிடிக்கறதுக்கு கடும் போட்டி... அதுல வாரிசுகளை கொண்டு வர்றதுக்கு ரெண்டு விஐபிகள் மோதறாங்கன்னா பாருங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘யார் அவா...’’ என்று கேட்டாள் சுசி மாமி.

‘‘ஒருத்தர் அமைச்சருக்கு உறவினராம்... மற்றவர் நாடாளுமன்ற உறுப்பினரோட உடன்பிறப்பாம்... பெரிய தலைகள்லாம் மோதினா... கட்சியில உள்ள சாதாரண வக்கீல்கள் என்ன பண்றதாம்னு ஏடியெம்கே வக்கீல்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சட்டசபையில காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்குனு இன்னும் முடிவு செய்யல... கவர்னர் உரையும் முடிஞ்சுடுத்து... விவாதமும் முடிஞ்சிடுத்து... எல்லா கட்சிகளும் அறிவிச்சுட்டா...’’ என்றாள் சுசி மாமி.

‘‘தற்காலிக தலைவரா கோபிநாத் இருக்கார்... மேலிடம் பட்டுக்கோட்டை எம்மெல்லேவை அறிவிக்க வாய்ப்பிருக்கு... பட்ஜெட் கூட்ட தொடர்ல தெரிஞ்சிடும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிஎம் 13ம் தேதி டெல்லி போறாங்களாம்... அதுக்கான ஏற்பாடுகள் நடந்துண்டு இருக்காம்... எல்லா லீடர்சையும் சந்திக்கறதா பிளான்... தமிழ்நாடு ஹவுஸ்ல தங்கறதால ரிப்பேரிங் வேலை ஜரூரா நடந்துட்டு இருக்குனு டெல்லி ப்ரண்ட் சொன்னார்...’’ என்று சுசி மாமி சொல்லி முடிக்கும்போது குறுக்கிட்ட தோழி, ‘‘சரி சுசீ... நான் கிளம்பறேன்...’’ என்று விடைபெற்றார்.
gossip 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக