புதன், 8 ஜூன், 2011

ஆயுதங்களுடன் வாருங்கள் : சீடர்களுக்கு ராம்தேவ் திடீர் அழைப்பு

காவிப்பயங்கரவாதி ராம் தேவ் தனது சுயரூபத்தை காட்டிவிட்டார்

மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.
நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது.

போலீசார் நடத்திய தடியடியில் 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஒரு பெண் முதுகெலும்பு முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார்.

ஆனால் இன்று அவர்,அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.
அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று  கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக