ஞாயிறு, 26 ஜூன், 2011

கேரளப் பெண்கள். வில்லங்க வீடியோ கேரள போலீஸின் கைக்குப் போகாமல் தடுக்கு

மாணவி பலாத்கார விவகாரத்தில் சிக்கியிருக்கும் தமிழக அதிகாரிகள் சிலரின் அந்தரங்க ஆட்டம் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

கேரள மாணவி பலாத்கார விவகாரத்தில் சிக்கியிருக்கும் தமிழக அதிகாரிகள் சிலரின் அந்தரங்க ஆட்டம் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோ பதிவுகளை கேரள போலீஸின் கைகளுக்குக் கிடைக்கவிடாமல் தடுக்கும் முயற்சியில் அதிகாரிகள் தரப்பு இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த விஜிலா(பெயரை மாற்றியிருக்கிறோம்)என்ற பதினைந்து வயது மாணவியை சினிமா ஆசை காட்டி ஏராளமானோர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் கொடுமை பற்றி கடந்த இதழில் எழு தியிருந்தோம். இந்தக் கொடுமைக்கு உடந்தையாக இருந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் மற்றும் திருவனந் தபுரத்தைச் சேர்ந்த புரோக்கர் ஜோஷி, மலையாள சினிமா நடிகர் விஜயன், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மணிகண்டன் உள்பட முப்பது பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிகண்டன், தமிழக நெடுஞ்சாலைத் துறையில் மாநில அளவிலான, ‘கிளாஸ் ஒன்’ அந்தஸ்து பெற்ற காண்ட்ராக்டர். நெடுஞ்சாலைத் துறையில் ஏதாவது ஒரு ‘காண்ட்ராக்ட்’ தனக்கு கிடைத்துவிட்டால், அதற்கு உதவிய அதிகாரிகளை உடனடியாக அழைத்துச் சென்று ‘பார்ட்டி’கொடுப்பது மணிகண்டனின் வழக்கம். அந்த ‘பார்ட்டி’களுக்கு மதுவை மட்டுமே எதிர்பார்த்துச் செல்லும் அதிகாரிகளுக்கு அதிரடியாக ‘மாது’க்களையும் சப்ளை செய்து திக்குமுக்காட வைப்பது அவனது ஸ்டைல்!.

கடந்த பத்தாண்டுகளாக மணிகண்டன் ஏராளமான பெண்களை இப்படி அதிகாரிகளுக்கு விருந்தாக்கியி ருக்கிறானாம்.எனினும் விஜிலா விவகாரம் மூலம்தான் இது வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு தொலைக்காட்சித் தொடர்களை தனது சொந்தப் பொறுப்பில் தயாரித்திருக்கிறான் மணிகண்டன். அவன் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்த நோக்கமே, அதில் நடித்த கேரளப் பெண்களை தனது ‘பார்ட்டி’களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்குத்தானாம்.

இந்த அந்தரங்க வேலைகளுக்காக தனது சொந்த ஊரான கண்ணுமாமூட்டில் உருவாக்கி வைத்திருக்கும் சொகுசு பங்களாவைத் தவிர, காரோடு மலைப்பகுதியில் தனது கல்குவாரிக்கு அருகேயே பாதாள அறைகளுடன் கூடிய ஒரு ‘கெஸ்ட் ஹவுஸை’யும் எழுப்பியிருக்கிறான் மணிகண்டன். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சாதாரணமான ஒரு ஓய்வறை போல் தோற்றமளிக்கும் இந்த ‘கெஸ்ட் ஹவுஸி’ன் உள்ளே ‘பார்ட்டி’களுக்குத் தேவையான சகல வசதிகளும் உண்டாம்.

கடல்மட்டத்திலிருந்து சுமார் மூன்றாயிரம் அடி உயரத்தில்,ஊட்டி ரேஞ்சுக்கு குளுகுளு க்ளைமேட்டில் இருக்கும் இந்த ‘கெஸ்ட் ஹவுஸு’க்கு மிக முக்கிய அதிகாரிகளை மட்டுமே மணிகண்டன் அழைத்து வ ருவானாம். அப்படி ஒருமுறை விருந்தினராக இங்கு வந்த கேரள போலீஸ் ஐ.ஜி. ஒருவர், இந்த ஏரியா அழகில் சொக்கிப்போய் அந்த குவாரியையும் ‘கெஸ்ட் ஹவுஸை’யும் ஒருசேர வாங்க நினைத்து இரண் டரைக் கோடி ரூபாயை மணிகண்டனிடம் இழந்திருக்கிறார்.

மணிகண்டனிடம் நெருங்கிப் பழகிய சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “ஒருவருக்கு ஐந்து ரூபாய் செலவழித்தால், அவரது உதவியால் பத்து ரூபாய் ஆதாயம் பார்க்காமல் விடவே மாட்டான் மணிகண்டன். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயர் கொண்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர், மது, மாது எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு ஒப்பந்த விவகாரங்களில் இவனுக்கு போக்குக் காட்டியிருக்கிறார். ஒருநாள், அந்த அதிகாரி இவனது சொகுசு மாளிகையில் கேரளப் பெண்ணுடன் இருந்த வீடியோ காட்சிகளை அவரது அலுவலகத்திற்கே சென்று இவன் போட்டுக் காட்ட, அதன்பிறகு அவர் இங்கு பொறுப்பில் இருந்த காலம் வரை, ‘நல்ல பிள்ளை’யாக இவன் சொல்லைக் கே ட்டார்.


ஆக, இவனது சொகுசு மாளிகைக்குப் போன பெரும்பாலான அதிகாரிகள் அவனது வீடியோவில் சிக்கியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவனது வீடு மற்றும் சொகுசு மாளிகையில் கேரள போலீஸ் சோதனை போட்டால் அந்த வில்லங்க காட்சிகள் எல்லாம் வீதிக்கு வரும். அதிலும் போலீஸ் அதிகாரிகள்தான் அதிகம் பேர் மணிகண்டனின் அரவணைப்பில் சிக்கிக் கிடந்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோயிலை அடுத்த பார்வதிபுரத்தில் சக காண்ட்ராக்டர் ஒருவரைத் தாக்கியதாக மணிகண்டன் மீது புகார் எழுந்தது. அந்த விவகாரத்தில் இருந்து இவனைக் காப்பாற்ற அப்போது தனிப்பிரிவு எஸ்.ஐ.யாக இருந்த ஒருவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவர்தான் இவனது பராக்கிரமங்கள் பற்றி வடசேரி எஸ்.ஐ.யாக இருந்த ‘முத்து’ என முடியும் அதிகாரிக்கு தகவல் சொல்ல, பெரும் சபலிஸ்டான ‘முத்து’ இவனுடன் ஒட்டிக்கொண்டார். இப்படியே அடிதடி பிரச்னைகள், கு வாரி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என பலவற்றையும் சமாளிக்கும் பொருட்டு போலீஸ் அதிகாரிகள் மட் டுமே சுமார் முப்பது பேர் இவனது சொகுசு மாளிகைக்கு வந்து போயிருக்கிறார்கள். இவர்கள் எ ல்லோருமே, ‘வீடியோ நம்மை காட்டிக் கொடுத்துவிடுமோ?’ என இப்போது நடுங்கிக் கிடக்கிறார்கள்’’ என் கிறார்கள்.

இந்த வில்லங்க வீடியோ கேரள போலீஸின் கைக்குப் போகாமல் தடுக்கும் முயற்சியிலும் சிலர் இறங்கியி ருப்பதாகத் தெரிகிறது. இதற்காக எர்ணாகுளத்தில் முகாமிட்டிருக்கும் சிலர் உரிய ஆட்கள் மூலம் அங்கு ள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு ஐம்பது லட்ச ரூபாய் வரை தருவதாக பேரம் பேசி வருகிறார்களாம். மணிகண்டனை போலீஸ் காவலில் எடுக்கும்போது விசாரணைக்காக சொந்த ஊருக்கு அழைத்து வந்து அவமானப்படுத்தக் கூடாது.அவனது சொகுசு மாளிகையில் போலீஸ் சோதனை போடக்கூடாது என்பது தான் பேரமாம். ஒருவேளை போலீஸ் இதில் திசைமாறிச் சென்றாலும் கேரள அரசியல் கட்சிகள் அதை அனுமதிக்காது.. ஏனெனில், சிறுபான்மை சமூக மாணவியான விஜிலா விவகாரம் கேரள அரசியலில் பெ ரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றி இடமாறுதல் ஆகியுள்ள ‘வேல்’ அதிகாரி, இந்த விவகாரத்தால் பயந் துபோய் தலைமறைவாகி விட்டாராம். இந்த ‘வேல்’ அதிகாரி களியக்காவிளையில் பணியாற்றியபோது மிக நேர்மையானவர் எனப் பெயரெடுத்தவர்.துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்காகத்தான் மணிகண்டன் முதலில் இவரை அணுகியிருக்கிறான். அவன் மீதுள்ள பல வழக்குகளை அதிகாரி சுட்டிக்காட்டி அனுமதி மறுத்தி ருக்கிறார். உடனே சொகுசு மாளிகை சூட்சுமத்தை அரங்கேற்றி அந்த அதிகாரியை கவிழ்த்திருக்கிறான். தற்போது மணிகண்டன் கைதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவைக்கூட வாங்காமல்,செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார் அந்த ‘வேல்’ அதிகாரி.

கடந்த 21-ம் தேதி கோர்ட் அனுமதியுடன் மணிகண்டனை விசாரணைக்கு எடுத்திருக்கிறது எர்ணாகுளம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ். மணிகண்டன் கொடுக்கப்போகும் வாக்குமூலத்தில்தான் குமரி மாவட்ட அதிகாரிகள் பலரது எதிர்காலமே அல்லாடிக்கொண்டிருக்கிறது.
thanks kumudam +chandra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக