வெள்ளி, 3 ஜூன், 2011

மாணவி பிணம் எரிப்பு; ஆசிரியர் மீது வழக்கு

திருப்பத்தூர் தாலுகா கோச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் லதா. இவருடைய மகள் ரேணுகா (15), கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி பள்ளிக்குச் சென்ற ரேணுகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து ரேணு காவை தேடிச் சென்ற போது, கோச்சயம் பகுதியில் உள்ள முருகேசன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பு பம்ப்செட் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்ததும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே சாவு குறித்து வெளியே தெரிந் தால் போலீஸ், கோர்ட்டு வழக்கு என்று அலைய வேண்டியிருக்கும் என்பதால் ரேணுகா உடலை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் இருந்து எடுத்து வந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாக கூறி எரித்து விட்டனர்.

இந்நிலையில் நன்றாக பள்ளிக்குச் சென்ற மாணவி ரேணுகா மாலையில் இறந்தது எப்படி? இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது. ரேணுகா பெற்றோர் இதை மறைக்கிறார்கள் என்று கடந்த ஊர் மக்கள் பேசி வந்தனர்.

இதையடுத்து பள்ளி மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கோச்சியம் ஊர் தலைவர் குணசேகரன் கந்திலி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரேணுகா தாய் லதா, தாத்தா பெருமாள், பாட்டி மங்கை, சித்தப்பா சங்கர், சித்தி பார்வதி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேணுகா சாவில் பல சிக்கல்கள் நீடிப்பதால் அவர் படித்த பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார் மீதும் போலீசார் இதையடுத்து அவரையும் வழக்கில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப் பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியாத நிலையில் போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.

வல்லரசுக்கனவில் மிதப்பவர்களே முதலில் நல்லரசு நல்ல நாடு என்றால் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக