திங்கள், 20 ஜூன், 2011

காதல் ஜோடிகள்,காரைநகர் கசூரினா கடற் கரைக்கு வரும்

காரைநகர் கசூரினா கடற் கரைக்கு வரும் காதல் ஜோடிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாடிகளை ஆக்கிரமித்து அங்கு அத்து மீறி நடந்து கொள்கின்றனர்.
அதேசமயம் அங்கு கூடும் பெருங்குடி மக்கள் அங்கு அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர்.      மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் சினிமாக் கதாநாயகர்களாக மாறி, அடிதடிக்கு வருகின்றனர். அதுமட்டுமன்றி மீனவர்களின் பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகள், வள்ளங்களைச் சேதப்படுத்தியும் வருகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளால் மீனவர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பல்வேறு தரப்பினருக்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள போதும் எதுவித முன்னேற்றமும் இல்லை என்று மீனவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கசூரினா கடற்கரையில் உல்லாசப் பயணிகளுக்கான இடம் குறித்தொதுக்கப்பட்டுள்ள போதிலும் அந்தப் பகுதி சரியாக அடையாளப்படுத்தப்படாமையால் அங்கு வருபவர்கள் மீனவர் தொழில் செய்யும்  பகுதிகளுக்கும் பிரவேசிக்க நேரிடுகிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடற்கரைக்கு வருபவர்கள் வெற்று மதுப்போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் குப்பைகூழங் ளைக் கண்டபடி வீசிவிட்டுச் செல்வதால் சூழல் பெரிதும் மாசடைந்து வருகிறது என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக