இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து சேவையை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என பி.பி.சி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிந்து ஆராய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் ஜெயலலிதாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை இலங்கையில் மீள் குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிந்து ஆராய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் ஜெயலலிதாக கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது கப்பல்சேவை தொடக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அ.தி.மு.க உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக