சனி, 25 ஜூன், 2011

இலங்கை மீனவர்களை விடுவித்தால் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவர் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்குமாயின், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கை கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் 23 பேரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் கைது குறித்து தென்னிந்திய மீனவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றதை போன்று, இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும் போது இங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 70 இலங்கை மீனவர்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை மீனவர்கள் ஒரு சிலரே தவறுதலாக இலங்கை கடல் எல்லையை மீறுவதாகவும் இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் இந்திய கடல் எல்லையை மீறுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை தமிழ் மக்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் சுமார் 30 வருட யுத்தத்தின் பின்னர் கடற்றொழிலை ஆரம்பித்துள்ள வடபகுதி மீனவர்களின் நடவடிக்கைகளுக்கு இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராஜித சேனாரத்ன வலியுறுத்தி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக