புதன், 29 ஜூன், 2011

தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவு கேரள மாணவி கற்பழிப்பு

நாகர்கோவில்: கேரள மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய தமிழக இன்ஸ்பெக்டர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சுதீர். இவரது மகள் விஜயா. 14 வயதான இவர் பள்ளியில் படித்து வந்தார். அப்போது விஜாயவை சினிமா நடிகையாக்குவதாக கூறி தந்தையே விபசாரத்தில் தள்ளினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் அந்த மாணவி விருந்தாக்கப்பட்டார்.

பெற்றோரின் பண ஆசையால் செக்ஸ் சித்ரவதைக்கு ஆளான மாணவி அவர்களின் பிடியில் இருந்து தப்பி எர்ணாகுளம் போலீசில் தஞ்சம் அடைந்தார். தந்தையே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடுமையை போலீசில் கூறி கதறி அழுதார். 200-க்கும் மேற்பட்டோர் பலவந்தப்படுத்தி தன்னை கற்பழித்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சட்டசபையிலும் இது எதிரோலித்தது. இதனால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இதற்கிடையே மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய தமிழ்நாடு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர் குமரி-கேரள எல்லையில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிபோது கான்டிராக்டர் மணிகண்டனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அப்போது மணிகண்டன் மீதான வழக்கில் இருந்து அவரை காப்பாற்றி இருக்கிறார். இதற்காக மணிகண்டன் அவருக்கு மாணவியை விருந்தாக்கி இருக்கிறார். விசாரணையில் மணிகண்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பற்றிய விபரங்களை கேரள போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கேரள போலீசார் குமரி மாவட்ட இன்ஸ்பெக்டரை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்த தகவல் பரவியதும் குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இடம் மாற்றத்திற்கான நியமன ஆணையைக் கூட அவர் வாங்கவில்லை. கேரள போலீசார் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர்.

English summary
A Kanyakumari inspector, involved in the Kerala minor rape case has absconded. Kerala special team has stationed in Kanyakumari and is in search of him. The minor has given a statement that nearly 200 men spolied her life.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக