வெள்ளி, 3 ஜூன், 2011

கலைஞர் காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல், கூடா நட்பு துன்பத்தில் முடியும்

சென்னை: கூடா நட்பு துன்பத்தில் போய் முடியும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

கருணாநிதிக்கு இன்று 88வது பிறந்தநாள். இதையொட்டி பெரியார், அண்ணா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

சமூக எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மறந்து விடாமல் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என்றார்.

தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்..

முன்னதாக தனது பிறந்தநாளையொட்டி யாரும் தன்னை நேரில் வந்து வாழ்த்த வேண்டாம் என்றும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,

எனது 88வது பிறந்த நாளினையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.

நேரில் எனக்கு வாழ்த்து வழங்க வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க வேண்டுமென்று கட்சி உடன்பிறப்புகள் வற்புறுத்த வேண்டாம் என்றும் - வீட்டிற்கோ கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னைக் கட்சி உடன்பிறப்புகளும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
 

English summary
Bad friendship will end in trouble: கருணாநிதி
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக