திங்கள், 20 ஜூன், 2011

கச்சதீவு இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது: இந்திய மத்திய அரசாங்கம்

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சதீவை மீளப் பெற வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கச்சதீவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து எதுவித நோக்கங்களும் கிடையாதென அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1974ம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை திரும்பப் பெற்று அங்கு தமிழக மீனவர்களுக்கு மட்டுமே மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக