செவ்வாய், 14 ஜூன், 2011

பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்து கொன்றார்


கொடைக்கானல் அடுத்த ஆலத்துறையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(40). இவரது மனைவி சுதா(28). இருவரும் கூலி தொழிலாளர்கள். திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
இந்நிலையில், முத்துப்பாண்டியின் தம்பி இறந்துவிட்டார். அவரது மனைவியை முத்துப்பாண்டிக்கு 2வதாக திரு மணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை வந்த முத்துப்பாண்டி, குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் 2 மனைவிகளுடன் தங்கி இருந்தார். இங்கு சரிவர வேலை கிடைக்காததால், பின்னர் கொடைக்கானலுக்கு சென்றுவிட்டனர்.

கடந்த வாரம் சுதா, தேனியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றார். மீண்டும் கொடைக்கானல் செல்லவில்லை. கோவை குறிச்சிக்கு வந்தார். அங்கு ஏற்கனவே வசி த்த வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கறிக்கடைக்காரர் சேகர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சுதாவை காணாததால் சந்தேகமடைந்த முத்துப்பாண்டி, அவரை தேடி குறிச்சிக்கு வந்தார். அங்கு விசாரித்தபோது, சுதா சேகர் வீட்டில் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முத்துப்பாண்டி காலையிலேயே கறிக்கடைக்கு சென்றுவிட்டார். முத்துப்பாண்டி, ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி வந்து சேகரின் வீடு அருகே நின்றார். அப்போது சுதா வெளியே வந்துள்ளார்.
எனக்கு துரோகம் செய்கி றாயா என கத்திக்கொண்டே சுதா மீது பெட்ரோல் ஊற்றி முத்துப்பாண்டி தீவைத்துள்ளார். அதற்கு சுதா, வீட்டு வேலை செய்யத்தான் இங்கு வந்ததாக கூறியுள்ளார். தீவைத்துவிட்டு முத்துப்பாண்டி ஓடிவிட்டார்.

அக்கம்பக்கத்தினர் சுதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போத்தனூர் போலீசாரிடம் மேற்கண்ட தகவலை சுதா தெரிவித்தார். முத்துப்பாண்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுதா இறந்துவிட்டார். இதையடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. முத்துப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக