பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 26 பேர் இன்று மாலை வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1பிரிட்டனில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 6 தமிழர்கள், 7 முஸ்லிம்கள், 3 சிங்களவர்கள் உட்பட 26 பேர் பிரிட்டனிலிருந்து நேற்றுமாலை விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டனர். அவர்களுடன் பிரித்தானிய எல்லை முகவரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றும் விமானத்தில் வந்திருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை வந்தடைந்த, நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபின் இன்று மாலை விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சற்றுமுன் வெளியேறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக