மாஸ்கோவிலிருந்து petrojavotsk க்கு சென்ற விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறியது .
இவ்விபத்தில் தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் VVER மென்னீர் ரக அணு உலையின் தலைமை வடிவமைப்பாளர் செர்கே ரிசொவ் பலியானார் .
இவரின் மரணம் ரஷ்ய அணு விஞ்ஞானிகளையும் இந்திய அணு விஞ்ஞானிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
மூன்று வருடங்களுக்கு முன்னர் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் தலைமை இயக்குனர் சுனில் குமார் அகர்வால் திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் .
கடந்த ஆண்டு உசிலம் பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இயக்குனராக இருக்கும் காசிநாத் பாலாஜி படுகாயமடைந்தார் .சம்பவத்தில் அவரது மனைவி உயிரிழக்க நேரிட்டது .
சில வருடங்களுக்கு முன்பாக ஜூனியர் விகடன் பத்திரிகையில் கொல்ல வரும் கூடங்குளம் எனும் கட்டுரை வெளிவந்துகொண்டிருந்தது .அப்போது அது சற்று வேடிக்கையாக இருந்தது .
கூடங்குளம் அணு உலை முக்கிய அதிகாரிகளை மட்டும் கொல்லுமா அல்லது தமிழக மக்களையும் கொல்லுமா என்பது தெரியவில்லை .
http://koodalbala.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக