வியாழன், 9 ஜூன், 2011

இரண்டு இலட்சம் கறவைப் பசுக்களை இறக்குமதி,பால் உற்பத்தியை

பால் உற்பத்தியை 450 மில்லியன் லீற்றரால் அதிகரிக்க திட்டம்

உள்ளூர் சந்தையில் நாளொன்றிற்கு பால் உற்பத்தியை 450 மில்லியன் லீற்றரால் அதிகரிப்பதற்காக புதிதாக இரண்டு இலட்சம் கறவைப் பசுக்களை தேசிய பாலுற்பத்தித் துறையுடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது சந்தையில் நாளொன்றுக்கு 250 மில்லியன் மில்லிமீற்றர் அளவுடைய பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனை 700 மில்லியன் மில்லி லீட்டர் வரையில் அதிகரிப்பதற்காகவே இவ்வாறு கறவைப் பசுக்கள் சேர்க்கப்பட உள்ளதாக கால்நடைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால தெரிவித்தார்.

வருடாந்தம் பால்மா இறக்குமதிக்காக சுமார் 3000 கோடி ரூபா செலவிடப்படுவதாகவும் இதனை குறைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் மேற்படி திட்டத்தை அமுல்படுத்த உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கறவைப் பசுக்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 4 கோடி ரூபா தொகையினை சலுகைக் கடன் அடிப்படையில் பாற்பண்ணையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் மித்திரபால தெரிவித்தார்.

உள்ளூரில் பத்து இலட்சம் கறவைப் பசுக்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றிலே சிறந்த கறவைப் பசுக்கள் மூன்று இலட்சம் வரையில் மாத்திரமே உள்ளன.

அதன் காரணமாக மேலும் இரண்டு இலட்சம் கறவைப் பசுக்களை இணைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மித்திரபால தெரிவித்தார்.

சிறந்த கறவைப் பசு ஒன்றிடமிருந்து நாளொன்றிற்கு சுமார் 40-50 லீட்டர் பாலை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதன் கீழ் புதிய தொழிவாய்ப்புக்கள் ஒரு இலட்சம் ஒருவாகலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக