புதன், 1 ஜூன், 2011

எழுவைதீவுப் பிரதேசத்துக்கு முதன் முறையாக வைத்தியசாலை

ezhuvai-2

முதன் முறையாக யாழ் எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வைத்தியசாலை இன்று திங்கட்கிழமை (30.5.2011) திறந்துவைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கம் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்டினும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வைத்தியக் கலாநிதி நோயல் நடேசன் மற்றும் கலாநிதி சியாமளா நடேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த அருணா புண்ணியமூர்த்தியும், பொறியியலாளர் மா. இராமதாஸ_ம் கலந்துகொண்டனர். தொடர்ந்து விருந்தினர்கள் உரை நிகழ்த்தப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலைக் கட்டடத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்டின் மற்றும் வைத்தியக் கலாநிதி நடேசன் ஆகியோர் நாடாவை வெட்டி திறந்துவைத்தனர். இந்த நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், பிரதேச மக்கள் உட்பட்ட பலர் கலந்துகொண்டனர். யாழ் எழுவைதீவுப் பிரதேசத்தில் வைத்தியசாலை அமைப்பதற்கான அடிக்கல்லினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் நாட்டிவைத்தார். வைத்தியக் கலாநிதி நோயல் நடேசனின் நிதியுதவியுடனும், கனடாவாழ் தமிழ் மக்களின் நிதியுதவியுடனும் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக