ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 ஆயிரத்து 500 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 700 படகுகளில் 3 ஆயிரத்து 500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று மாலை கச்சத்தீவு பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால் மீனவர்கள் உயிர் பயம் காரணமாக உடனே கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயல் மூலம் ஒவ்வொரு மீனவருக்கும் தலா ரூ. 17 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்
தமிழக மீனவர்கள் மீது கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது இது மூன்றாவது முறையாகும். இலங்கை கடற்படையின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது என மீனவ அமைப்பு பிரநிதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி கடலில் அத்துமீறும் இலங்கை கடற்படை குறித்து சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர மீனவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

English summary
Sri Lankan navy has driven 3, 500 TN fishermen who were fishing near Kachatheevu. This is the third attack against TN fishermen in the last one week. Fishermen association and human rights groups are discussing about filing a case against Lankan navy in the international court of justice.
aththu meeri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக