சனி, 25 ஜூன், 2011

தந்தை முதல் 200க்கும் மேற்பட்டோரால் சீரழிக்கப்பட்ட +2 மாணவி பேட்டி



அந்த மாணவி ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

’’நான் பிளஸ்-1 படித்துக் கொண்டு இருந்தபோது, எனது தந்தையால் கற்பழிக்கப்பட்டேன். தொடர்ந்து தாயாரின் பணப் பேராசையால் சினிமா வாய்ப்புக்காக பல பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர்.

யார்-யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் சிறுமி என்று கூட பார்க்காமல் கடந்த 11/2 வருடங்களில் 200 பேர் வரை எனது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். ஆனால், அவர்களை நேரில் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

தந்தையின் கொலை மிரட்டல் காரணமாக இதுவரை எனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளியே தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது.

தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். இனி மேலும் என் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை. தற்போது காப்பகத்தில் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள்’’ என்று கூறினார்.

இதற்கிடையே மாணவியின் பாலியல் தொந்தரவு வழக்கில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாணவியின் பாதுகாப்பு குறித்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த மந்திரி எம்.கே. முனீர், ``பாதிக்கப்பட்ட மாணவிக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக