டுபாயில் பணிபுரிந்த வந்த தனது மனைவி (இலங்கை வீட்டுப்பணிப் பெண்) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கணவரொருவர் எமக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது மனைவி முன்னர் தான் அங்கு பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், தான் நாடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பணச்சிக்கல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அவருடன் பணிபுரிந்த அதே தினத்தில் நாடு திரும்பும் இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணொருவர் தனக்கு அறியப்படுத்தியதாகவும், இலங்கை வந்ததும் அவர் எதுவித தொடர்பினையும் தன்னொடு ஏற்படுத்தி கொள்ளாததினால் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது மனைவியின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவர சுமார் 5 லட்சம் ரூபா தேவைப்படும் என அந்நாட்டவர்கள் தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தனது இயலாமையினை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு மற்றும் உதவிக் கோரிக்கை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக