வெள்ளி, 27 மே, 2011

China பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியும்: சீனா


china-sri-lanka இலங்கை தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு முழுத் தகைமையையும் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார மைச்சர் ஜி.எல் பீரிஸ் சீனாவுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போதே சீன வெளிவிவகார அமைச்சர் யாவ் ஜீசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் சீனாவுக்கு சென்றிருந்தார்.

சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள், இலங்கை அராங்கத்தால் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக் குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்தும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் சீன அமைச்ருக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன வெளியுறவு அமைச்சரை அமைச்சர் பீரிஸ் பீஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். இரு நாடுகளுக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மிகவும் சுமுகமானவையென இரு அமைச்சர்களும் குறிப்பிட்டனர்.

சீனாவின் திடமான வெளிநாட்டுக்கொள்கையான “ஒரே சீனா“ என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் ஆதரிக்கும். சீனா எட்டியுள்ள உயரிய மாற்றமுடியாத முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் என்பவற்றுக்கு இலங்கையின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனைகளை சீன வெளிநாட்டமைச்சர் பாராட்டியதோடு நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் வழிநடத்தியுள்ளமைக்கு தனது அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் சீனக் குடியரசுக்கு விஜயம் செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

தருஸ்மன் அறிக்கையிலுள்ள பல்வேறுபட்ட விடயங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பரஸ்பர முகவராண்மை ஆலோசனைக்குழுவின் முன்னெடுப்புக்கள் என்பன குறித்து அமைச்சர் பீரிஸ் சீன அமைச்சருக்கு விவரமாக எடுத்துரைத்தார்.

பொதுவாக உருவாகிவரும் சூழ்நிலைகள் பற்றி சீன வெளிநாட்டமைச்சர் யாவ்ஜீசி குறிப்பிடுகையில், இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் தமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான தகைமையை கொண்டுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மீள் நிர்மாணம் ஆகிய பணிகளை முன்னெடுப்பதற்கு சீனா இலங்கைக்கு பக்கபலமாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் சீனாவின் பங்களிப்பு குறித்து அல்மச்சர் பீரிஸ் குறிப்பிடுகையில், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், மாத்தளை விமான நிலையம், புத்தளம் அனல் மின்சார திட்டம், கொழும்பு கட்டுநாயக்கா கடுகதிப் பாதை என்பவற்றுக்கு சீனா நிதி வழங்கியமைக்கு பாராட்டுத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல வீதி அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாண திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இரு அமைச்சர்களும் குறிப்பிட்டதோடு இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 2ஆம் கட்டப் பணி மற்றும் மாத்தல்ற கதிர்காமம் புதிய ரயில் பாதை விஸ்தரிப்பு என்பவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இருவரும் பேச்சுவார்ததை மேற்கொண்டனர்.

2011ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேந்கொள்ளும் வருடமென பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் கூறியதுடன் ஸ்ரீலங்கன் விமம்னசேவை தனது சேவையினை ஷங்காய், குவாங்ஸோ ஆகிய இடங்களுக்கு ஆரம்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். கடந்த வருடம் ஆகஸ்டில் ஜுனான் மாகாணத்தின் ஆளுநர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது சீன ஈஸ்ரன் எயார்லைன்ஸ் தனது கன்னிச் சேவையை ஆரம்பித்ததை இரு அமைச்சர்களும் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தனர்.

இலங்கைக்குள் சீன உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுப்பதில் அதிகரித்த வேகத்தை வழங்கும் வசதியை அளித்ததன் மூலம் இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட சேரிட அந்தஸ்தை சீனா வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. மேம்படுத்திய விமானத்தொடர்புடன் இலங்கைக்குள் கூடுதலான சீன முதலீடுகள் வருமென அல்மச்சர் பீரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை சீன அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக