திங்கள், 23 மே, 2011

திஹார் சிறையில் மகள் கனிமொழியை சந்தித்தார் கருணாநிதி

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதி இன்று டெல்லி வந்து சேர்ந்தார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கனிமொழியை அவர் இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரையும் கருணாநிதி சந்தித்துப் பேச முடிவுசெய்து டெல்லிக்கு வந்துள்ளார் கருணாநிதி.

இன்று காலை டெல்லி வந்து சேர்ந்த கருணாநிதி விமான நிலையத்திலிருந்து நேராக தாஜ் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் மாலையில் அவர் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் திஹார் சிறைக்கு வந்தார்.

அங்கு முதலில் மகள் கனிமொழியை சந்தித்தார். தந்தையைப் பார்த்ததும் கனிமொழி உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கருணாநிதியும் கண் கலங்கியபடி தனது மகளுக்கு ஆறுதல் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக