வியாழன், 5 மே, 2011

யாழ் பேரூந்து நிலையத்தில் பெண் பிச்சைக்காரர்கள்: பயணிகள் சிரமம்!

கடந்த சில மாதங்களாக யாழ் பேரூந்து தரிப்பிடத்தில் பெண் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் கையில் ஒரு குழந்தையுடன் பல்வேறு காரணங்களை கூறி பிச்சை எடுப்பதை அவதாக்கக்கூடியதாக உள்ளது. இவர்களுடன் அங்கவீனமான சில ஆண்கள், அங்கத்தில் எந்தவித குறைபாடும் இல்லாத சில ஆண்கள், வயோதிபப் பெண்கள் என நாளுக்குநாள் புதுப்புது முகங்கள் யாழ் பேரூந்து தரிப்பிடத்தில் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டன. பேரூந்து தரிப்பிடத்தில் மட்டுமல்லாது பேரூந்துகளுக்குள்ளும் ஏறி பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு பேரூந்தில் ஒருவர் மாறி ஒருவராக அடுத்தடுத்து ஏறி பிச்சைவாங்கும் இவர்களில் சிலர் பணம் கொடுக்காதவர்களை திட்டிவிட்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் மது அருந்துபவர்களாகவே காணப்படுகின்றனர். பிச்சை எடுக்கும் பணத்தில் அந்தப் பெண்கள் குடித்துவிட்டு போதையில் கையில் வைத்திருக்கும் தமது குழந்தைகளையே நிலத்தில் தூக்கி எறியும் நிலைமைக்கு போதையில் இருப்பார்கள். இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர், “ஒரு நாள் பிச்சை கொடுக்கலாம் ஒவ்வொரு நாளும் கொடுக்க நம்மால் முடியாது. எங்களுடைய செலவுக்கு மட்டுமே பணம் கொண்டு வரும் எமக்கு பிச்சை கேட்டு வரும் எல்லோருக்கும் கொடுக்க முடியாது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக