தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுகொள்கிறேன், ,மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் மாற்றி வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு நல்லது செய்வார் ஜெயலலிதா என்று எதிர்பார்த்து மக்கள் வாக்களித்து இருக்கலாம்,
திமுகவை விட அதிமுக அதிக ஓட்டுக்கள் பெற்றதால் ஆட்சியை பெற்றுள்ளது அதே சமயம் திமுகவையும் மக்கள் ஒரே அடியாக ஒதிக்கி விடவில்லை.
ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்து உள்ளனர், அதனுடம் சேர்ந்ததால் தேதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது, வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் அதை விட்டு விட்டு குண்டர்களை ஏவி என் வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல் செய்துள்ளார்கள்,
இது விஜயகாந்துக்கு நல்லது அல்ல, நான் எங்கயும் ஒழிந்து விடவில்லை, என்தாயாருக்கு பாதுகாப்பகத்தான் மதுரையில் தங்கி உள்ளேன்,
சென்னையில் எனது வீட்டுக்கு 75 போலீசார் காவல் உள்ளனர் .
மதுரையிலும் நேற்று என்வீட்டுக்கு கல்வீசியவர்களை போலீசார் விரட்டி விட்டனர்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக