வெள்ளி, 20 மே, 2011

மீனாக்ஷி கங்குலி: இரகசியமாகக் கிசுகிசுத்தார்கள்.புலிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வலயத்தை விட்டு வெளியேற அனுமதி கிடையாது

             -மீனாக்ஷி கங்குலி-
Meenakshi_Gangulyஸ்ரீலங்காவின் தென்பகுதியிலிருந்து அதன் வடபகுதியின் முனை வரை நீண்டு ஓடும் ஏ-9 நெடுஞ்சாலை, நாங்கள் இராணுவத்தினரது கடைசிச் சோதனைச் சாவடியையும் கடந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அலுவலகத்தை அடைந்ததும், அவர்களின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் பிரதேசமாகிய வன்னிக்குள் நுழைவதற்காக அவர்கள் எங்கள் ஆவணங்களை பரிசீலித்தனர்.
2002ல் இது நடந்தது. அந்தச் சில நடவடிக்கைகள் அவர்கள் இரண்டு வேறுபட்ட தேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றியது. ஸ்ரீலங்காவின் பெரும் பகுதியும் பழகிப்போன ஜனநாயகம். கலகலப்பான ஊடகங்கள், உரிமைப் பிரச்சனைகளுக்காக சூடாக வாதமிடும் செயற்பாட்டாளர்கள், மாறுபட்ட அரசியல் விசுவாசமுள்ள குடிமக்கள், பொருளாதார வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் கலந்துரையாடல்கள் என பெரிய விடயங்களில் நிதானமாக நடைபோடும் நாட்டின் உணர்வுகள். ஸ்ரீலங்கா அரசாங்கப் படைகளுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னடத்தப்படும் பிரிவினைவாத தமிழ் புலிகளுக்கும் இடையேயான இரண்டு தசாப்தங்கள் நீண்ட கொடிய போர் இவை யாவற்றையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்ததைப் போலத் தோன்றியது.
வேறு விதமாகச் சொன்னால் ஒரு சுதந்திரத் தமிழீழம் எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் போன்ற அடையாளங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. தலைவர் பிரபாகரனின் உருவப் படங்கள் எங்கும் காணப்பட்டன. அவருடைய படை வீரர்கள் எல்லா இடத்திலும் பிரசன்னமாகி இருந்தார்கள். அதே போல அவருக்குத் தகவல் தெரிவிக்கும் உளவாளிகளும். சுகாதாரம், உணவு, வாழ்க்கைத் தொழில் அல்லது கல்வி போன்ற சகல உதவிகளுக்குமான வழிகள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளாலேயே தீர்மானிக்கப் பட்டன. தமிழ் புலிகளின் புகழினைப்பாடும் ஒற்றை இராகத்தினையே ஊடகங்கள் பாடின.
கிராமவாசிகள் பெரும்பாலும் எங்களை தனிமையான மூலைகளுக்குள் இழுத்துச் சென்று வேறுயாரும் கேட்காதபடி தங்கள் முறைப்பாடுகளை இரகசியமாகக் கிசுகிசுத்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வலயத்தை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. அப்படி வெளியேற வேண்டுமாயின் குடும்ப அங்கத்தினர்களை பிணைக் கைதியாக வைக்க வேண்டும், என அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என முணுமுணுத்தார்கள். ஏனெனில் விரைவிலேயே அவர்களும் யுத்தத்தில் ஈடுபடுத்தப் படுவார்கள். ஏராளமானவர்கள் ஏற்கனவே தங்கள் பிரியப் பட்டவர்களை இழந்து விட்டார்கள். கேள்விகளுக்கோ மாறுபடுவதற்கோ அங்கு இடமில்லை.
பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக வேண்டி நாங்கள் அங்கு சென்றிருந்தோம். ஆயிரக்கணக்கான கொடூரமான கொலைகளை இயக்கிய அந்த மனிதர் சிறிது பச்சாத்தாபத்துக்கு உட்பட்டிருப்பது போலத் தோன்றியது. மனிதாபிமானத் துஷ்பிரயோகங்கள் பற்றிய பொறுப்புக்கூறும் தன்மைகளின் தேவைகளைப் பற்றி கவனத்தில் எடுப்பதற்கு அவர் விருப்பப் படவில்லை. ஏனெனில் தன்னுடையது ஒரு சாதாரண போராட்டமே என்கிற விளக்கத்தில். அவர் வெற்றி பெறமுடியும் என அநேகர் நம்பினார்கள். ஆயுதங்களும் பணமும் அவருக்கு கிடைப்பதற்கு நிறைய வழிகள் இருந்தன. அவருக்கு நிறைய நண்பர்களும் இருந்தார்கள்.
மே 2009 ல் நிலமை மிகவும் தீவிரமாக மாற்றமடைந்த போது பிரபாகரன் மற்றும் அவரது உயர் மட்டத் தலைவர்கள் மரணமடைய நேரிட்டது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் தீர்மானமான உந்துதலினால் தோல்வி ஏற்பட்டது. மூன்று வருடத்துக்கும் சற்று அதிகமான காலம் மிக மோசமுள்ள கடுமையான யுத்தம் நடைபெற்றது. பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளுக்கு  நாடு சமாதானம் மற்றும் செழிப்பான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் தருணமாக அது இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக