திங்கள், 9 மே, 2011

ஜெ., முதல்வராக மகா யாகம்

சென்னை : ஜெயலலிதா முதல்வராக வேண்டி, சென்னை மணப்பாக்கத்தில் மகா யாகம் நடந்தது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று, தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டி, 45 புரோகிதர்கள் பங்கேற்று நடத்திய பிரமாண்டமான சத சண்டி(100) மகா யாகம் நேற்று நடந்தது. சென்னை, நந்தம்பாக்கத்திற்கு அடுத்துள்ள மணப்பாக்கத்தில் நடந்த இந்த யாகத்திற்கு, அ.தி.மு.க., மருத்துவர் அணி தலைவர் மைத்ரேயன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அவைத் தலைவர் காமராஜ் வரவேற்றார். மகா யாகம் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், அ.தி.மு.க., அமைப்பு செயலர் வளர்மதி மற்றும் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அவை தலைவர் காமராஜ் செய்திருந்தார்.
adurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ
2011-05-09 06:29:30 IST Report Abuse
என்னடா, ரொம்ப நாளா இதெல்லாம் காணோம்ன்னு இருந்தேன் !!! ஒரு வேளை திருந்திட்டாங்களோன்னு நம்பிட்டேன்..!!! யாகம் பண்ணினா ஜெயிக்கலாமா?? ஜனநாயகத்து மேலே நம்பிக்கை சுத்தமாப் போயிடுச்சா ??? அப்ப, இந்த தேர்தல் கூத்து எல்லாம் எதுக்கு???
 
அய்யோ ஐயோ ........... மக்கள் ஓட்டு போட்டால் தானே முதல்வராக முடியும். யாகம் நடத்தினால் முதல்வராக முடியும் என்று எந்த மட சாம்பிராணி சொன்னான். யாகம் நடத்தினால் அம்மா(?) ஒரு டுட்டோரியல் காலேஜுக்குக் கூட முதல்வராக முடியாது. சு சாமி சொன்னது போல ஜெ- அரசியலை விட்டு ஒதுங்கி மீண்டும் அம்மா, அத்தை வேடத்தில் சினிமாவுல சான்சு கிடைக்குமா என்று முயற்சி பண்ணினால் ஏதோ மக்கள் மறக்கமாட்டார்கள். ஜெ- க்கும் நேரம் போனது போல இருக்கும். காசுக்கு காசு, ஆஸ்க்கார் விருதும் (?) கிடைக்கும் (நடிப்புக்கு- அரசியல், சினிமா, நிஜ வாழ்க்கை எல்லாவற்றுக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக