வெள்ளி, 6 மே, 2011

ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா?

இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!

மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.

கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு. இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும். காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?

- எஸ்.ஆர்.சேகர் -
Sureshkumar Mani - paramakkudi malaysia,இந்தியா
2011-05-06 05:51:51 IST Report Abuse
இதுநாள் வரைக்கும் இந்திய உருப்பட உருப்படியா ஒரு திட்டமும் இந்த காங்கிரசிடம் இல்லை. பி ஜே பி ஆட்சியிலாவது இந்தியா உலக நாடுகளில் பிரபலமானது. இவன் என்னமோ அரசியல கரைச்சு குடிச்சா மாதிரியும்... இளைங்கர்களா வைச்சு பெரிய புரட்சி செய்ய போறா மாதிரி பில்டப்பு வேற... முதல்ல நல்ல பையனா பார்த்து sorry நல்ல பொண்ணா பார்த்து கட்டி கொடுங்க.
Krish - India,சிங்கப்பூர்
2011-05-06 05:49:35 IST Report Abuse
ராகுல் ஒரு அரசியல் அரவேக்காடு. இவருக்கு பின்னால் இளைஞர்கள், போக கூடாது, ஆனால் கலைஞர்கள் [DMK Family] போவார்கள். நதிகளை இணைக்க கூடாது - இது ஒன்று போதும். இளைஞர்கள் இவர் பின்னால் போக மாட்டார்கள், ஆனால் இவர் பின்னால போயிடுவார். 63 வருடம் இந்தியா வுக்குள் இருக்கும் சாப கேடு.
Anbalagan M - sembawang,சிங்கப்பூர்
2011-05-06 04:38:30 IST Report Abuse
முதலில் ராகுலுக்கு நாட்டிற்கு எது வேண்டும் எது தேவை இல்லை என்பதே தெரியவில்லை. இளைஞராக இருப்பதை தவிர இவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை.கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஆண்ட உங்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை இதற்கு யார் காரணம். நேருவா,இந்திரா காந்தியா,ராஜீவ் காந்தியா சொல்லுங்கள் ராகுல். நீங்கள் என்று நதிகள் இணைப்பை சாத்தியமில்லை என்று கூறினீர்களோ அன்றே உங்களது எண்ணங்கள் புரிந்து விட்டது நீங்கள் வருங்கால பிரதமாரக தகுதில்லைஎன்று. மக்களோட ஒன்னா சாப்பிட்டாலோ மண் சுமந்தாலோ மாற்றம் வந்து விடாது .இத்தனை வருடங்கள் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத உங்களால் இனி வரும் காலங்களில் உங்களால் என்ன செய்துவிட முடியும். உங்களுக்கு இருக்கும் ஒரே தகுதி இந்திராவின் பேரன் என்பதை தவிர வேறு ஒன்று இல்லை .
rama1955 lingam - chennai,இந்தியா
2011-05-06 05:03:47 IST Report Abuse
நேருவின் மகள் இந்திராகாந்தி. இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி, ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி, சொனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி, இப்படி குடும்ப வாரிசுகளாக வரும் எந்த தலைமையும் சரிவர அமையவில்லை. குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவர்களை கட்சி தொண்டர்கள் தலைமையாக பார்கிறார்கள். அப்படி ஒரு பார்வை தேவையற்றது. உண்மையில் நாட்டுக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று பார்த்து தலைவரை தேர்ந்து எடுக்கவேண்டும். சும்மா குடும்ப வாரிசுகள் என்ற காரணத்தை வைத்து அவர்கள் நாட்டுக்கு மற்றும் கட்சிக்கு தலைவராக பார்ப்பது சரி இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக