செவ்வாய், 31 மே, 2011

வவுனியா, நேர்த்தியாக நில அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே. ரக துப்பாக்கிகள்

வவுனியா கோவில் புதுக்குளத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

வவுனியா கோவில் புதுக்குளத்தில் வீட்டு வளவொன்றில் நேர்த்தியாக நில அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் என்பன பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் ஒன்றையடுத்து குறிப்பிட்ட வீட்டு வளவில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கொங்கிறீட்டினால் அமைக்கப்பட்ட ஒரு மறைவிடத்தில் பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது யாரால் ஏன் வைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான பொலிஸ் விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்ட வளவில் உள்ள வீட்டில் முன்னாள் ஆயுதக் குழுவாகிய அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக