புதன், 4 மே, 2011

Ram Jethmalani. கனிமொழி' விவகாரம்: கருணாநிதி, ஸ்டாலின், வீரமணி, சட்ட நிபுணர்கள் தீவிர ஆலோசனை-வாதாட ராம் ஜேத்மலானி



சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளை மறுதினம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி ஆஜராகும்போது அவருக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகலாம் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்துள்ளது. இதையடுத்து கனிமொழி வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவும் சம்மன் அனுப்பியுள்ளது.

கனிமொழி இல்லத்தில் தீவிர ஆலோசனை:

இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்று வருவதாகத் தெரிகிறது.

நேற்றைய ஆலோசனையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் நேரு, துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

திராவிட கழக தலைவர் வீரமணியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

கனிமொழிக்காக வாதாட ராம் ஜேத்மலானி?:

இந் நிலையில் நாளை மறுதினம் சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி நேரில் ஆஜராகும்போது அவர் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடுவார் என்று தெரிகிறது.

ராம்ஜேத்மலானி பாஜகவைச் சேர்ந்தவர், ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Eminent lawyer and BJP MP from Rajasthan Ram Jethmalany may appear for DMK MP Kanimozhi in 2G spectrum case. Meanwhile CM Karunanidhi has hold discussions with party leaders, legal experts on the issue. Kanimozhi should appear before Delhi CBI court on May 5, it is noted.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக