வெள்ளி, 13 மே, 2011

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: ராமதாஸ்

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: ராமதாஸ்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் உரிமைகள், சமூக நீதி, கல்வி, மது ஒழிப்பு ஆகியவற்றுக்காக பாமக தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளது. அந்த நம்பிக்கையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம்எனினும், மாற்றம் வேண்டும் என்று கருதியதால் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரத்தில், தமிழக மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பாமக தொடர்ந்து பாடுபடும்.


பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட பாமக மற்றும் கூட்டணிகட்சியினருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக