தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ஆர்.பி.உதயகுமார். சாத்தூர் தொகுதியில் இருந்து இவர் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அ.தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளராகவும், மதுரை, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார். அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணிவதில்லை. இவரது செயல்பாடு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல் செல்வது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
அம்மாவே (ஜெயலலிதா) என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா இருக்கும் இடம்தான் எனது கோவில்.
அவர் கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.
அமைச்சர் உதயகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக