செவ்வாய், 31 மே, 2011

ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

படத்தின் நாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு 2 விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இன்று திடீரென ஆடுகளம் படக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இக்குழுவில் தனுஷ், வெற்றி மாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற என்னை முதல்வர் வாழ்த்தினார். மற்றவர்களையும் வாழ்த்தினார். பாராட்டு தெரிவித்தார்.ரஜினிசாரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்றார்.

ஜெயலலிதாவுடன் லண்டன் தொழிலதிபர் சந்திப்பு:

அதே போல முதல்வர் ஜெயலலிதாவை பிரிட்டன் வாழ் தொழிலதிபர் லார்ட் ஸ்வராஜ் பாலும் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பால் கபாரோ குழுமத்தின் தலைவராவார். நேற்று சென்னை வந்த ஸ்வராஜ் பால், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கபாரோ குழும தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.
 

English summary
Sun Pictures' Aadukalam movie unit met CM Jayalalitha today. Actor Danush, Director Vetrimaran, Editor Kishore and Producer Kathiravan were included in the team. Jayalalitha wished Danush and others. And also Jayalalitha enquired about the health of Super Star Rajinikanth.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக