சனி, 21 மே, 2011

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை மகாராஷ்டிராவில்

மும்பை: உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை மகாராஷ்டிராவில் அமையவுள்ளது. மகாராஷ்டிர மின்துறை கழகம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் இந்த சோலார் மின் உற்பத்தி ஆலையில் சுமார் 150 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிருதிவ்ராஜ் சவான் கூறினார். இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சரைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் சவான் பேசுகையில், மகாராஷ்டிராவின் வடக்கு பகுதியான துலே மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகர் தாலுகாவில் , சூரிய ஒளி மின்சாரம் உற்பத்திய செய்யும் திட்டம் துவங்கப்படவுள்ளது. மொத்தம் 1987 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் துவங்கப்படவுள்ளது. இதில் 20 சதவீத பங்கினை மாநில அரசும், (397.40 கோடி) மீதம் ஜெர்மனைச் சேர்ந்த மெஸ்சர் கே.வி.ட.பிள்.யூ. என் நிதி நிறுவனம் முதலீடு செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் , இதே போன்று இப்பகுதியில் சந்திராப்பூரில் 1முதல் 4 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் உலகில் மிகப்பெரிய சோலார் மின் உறத்தி நிலையம் என் பெருமையினை மகாராஷ்டிர ‌பெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். சாதாரண மின் உற்பத்திக்கு ஒரு மொ வாட் மின்சாரத்திற்கு ரூ. 17.91 பைசா செலவாகும், ஆனால் சோலார் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு ஒரு மொவாட்டிற்கு ரூ. 12 தான் செலவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக