புதன், 11 மே, 2011

செல்வராகவன் - ஆண்ட்ரியா லடாய்... தனுஷுடன் நடிக்க மறுப்பு!

தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார் நடிகை ஆண்ட்ரியா. இயக்குநர் செல்வராகவன் எவ்வளவோ கேட்டும் மறுத்துவிட்டார் ஆண்ட்ரியா. எனவே ரிச்சா கங்கா பாத்யாய் நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ரகசிய காதல் என்றும், அதனால்தான் சோனியா அகர்வால் செல்வராகவனை விவாகரத்து செய்யும் அளவுக்குப் போனார் என்றும் முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது.

ஆனால் இதை செல்வராகவன் மறுத்தார். ஆண்ட்ரியா அமைதி காத்தார்.

இந்த நிலையில் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது.

இந்த நிலையில் செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.

ஆனால் படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இப்போது நடிக்க மறுத்து வெளியேறியுள்ளார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரிச்சாதான் ஒஸ்தி படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக