திங்கள், 2 மே, 2011

புதையலில் கிடைத்த ஐந்தரை கிலோ தங்கத்தினாலான கிரீடம், தங்க மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது









புதையலொன்றில் இருந்து கிடைத்த ஐந்தரைக் கிலோ எடைகொண்ட தங்கத்திலான கிரீடம் மற்றும் தங்க மாம்பழம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அம்பாறையின் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தனியிலையைக் கொண்ட காம்புடனான தங்க மாம்பழம் என்பன உள்ளடங்கிய பிரஸ்தாப தங்கப் புதையல் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயினும் அவை சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்டதா அல்லது தங்க முலாம் பூசப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கக் கிரீடமானது ஒரு கிலோகிராமும் நானூற்றி எண்பது கிராம்களும் எடைகொண்டுள்ளது. தங்க மாம்பழம் மூன்றரைக் கிலோகிராம் அளவிலான எடைகொண்டது. தற்போது அவையிரண்டும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக