செவ்வாய், 31 மே, 2011

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவரால் மாணவி மீது தாக்குதல்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்கைக்கு வந்த மாணவியை மருத்துவர் ஒருவர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  மேற்படி மாணவி ஒருவர் இன்று தனது காதில் பூச்சி புகுந்ததாக கூறி சிகிச்சை பெற யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வெளி நோயாளர் பிரிவு மருத்துவர் உரிய சிகிச்சைகளுக்காக காது,மூக்கு,தொண்டை மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பியுள்ளார். பூச்சியை எடுக்கும் பொருட்டு காதினுள் உரிய கருவியை மருத்துவர் செலுத்தியபோது வலிக்கவே மாணவி காதை அசைத்துள்ளார். இதனால் கோபமுற்ற மருத்துவர் மாணவியை திட்டியதாகவும் மீண்டும் மாணவி வலி தாளாது காதை அசைத்தபோது மருத்துவர் மாணவியின் முதுகில் ஓங்கி அடித்தாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து சிகிச்சைப் பிரிவை விட்டு அழுது கொண்டே வெளியேறிய மாணவி, இவ்விடயம் தொடர்பாக மருத்துவமனை பணிப்பாளருக்கு எழுத்து மூல முறைப்பாடு செய்துள்ளார். இவரது பெற்றோர்களினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பாக ஆராய்வதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக