புதன், 11 மே, 2011

ராஜாவை பலி கொடுத்து கனிமொழியை காப்பாற்றுகிறோமா?

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தி.மு.க., கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. முதல்வரின் மகளும், தி.மு.க., எம்.பி.,யுமான கனிமொழியின் பெயர், சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில்இடம் பெற்றதும் நெருக்கடி தொடங்கியது. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம், சி.பி.ஐ., கோர்டில் கனிமொழி ஆஜர், கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு, முன்ஜாமின் மனு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு என, பரபரப்பின் உச்சத்தில் உள்ளனர், தி.மு.க.,வினர். தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், 13ம் தேதி வெளியாகிறது; அடுத்த நாளான, 14ம் தேதி, கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரவுள்ளது. இந்த இரு நாட்களையும் எதிர்பார்த்து, அண்ணா அறிவாலயம் பரபரப்பாய் இயங்கி வரும் நிலையில், தி.மு.க., செய்தித்தொடர்பாளரும், எம்.பி.,யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், "புதுமலர்' இதழுக்கு அளித்த, "விறுவிறு' பேட்டி:காலை முதல், மாலை வரை கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று, கனிமொழிக்கு சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுவே ஒரு சிறை தண்டனை மாதிரி இல்லையா?அப்படி எப்படி கருத முடியும்? ஒரு குற்றவியல் வழக்கில் விசாரணை நடைபெறும் போது, வழக்கில் சம்பந்தப்பட்டவர், கோர்ட்டில் ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படும் போது, அன்றைய தினம், அவர் ஆஜராக வேண்டும். அதுபோல தான், இந்த வழக்கையும் பார்க்க வேண்டும்.ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக, கனிமொழி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சிறப்பு கோர்ட் சொல்லி உள்ளது. அவர் கோர்ட்டில் ஆஜராவதையே, சிறை தண்டனை என்று எப்படி கூற முடியும்?கனிமொழியை காப்பாற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை பலி கொடுக்கிறீர்களா? கனிமொழியின் வக்கீலுடைய வாதம் அப்படி இருப்பதாக கூறப்படுகிறதே?ஒரு வக்கீல் தமது கட்சிகாரருக்காக வாதிடும் போது, சில வாதங்களை முன்வைக்கிறார். அந்த வாதம், பிறரை பலிகொடுப்பதற்காக அல்ல. கோர்ட் நடவடிக்கைகளையும், வழக்கின் சாராம்சங்களையும் அறிந்தவர்களுக்கு இது நன்கு தெரியும்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவை பலி கொடுத்து, கனிமொழியை காப்பாற்ற முயல்கின்றனர் என்று கூறுவதில், எந்த அடிப்படையும் இல்லை. ராஜாவை பலிகொடுத்து கனிமொழியை காப்பாற்றுகின்றனர் என்று கூறும் அபத்தம், இதோடு நின்றுவிடவில்லை.டில்லி சிறப்பு கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட ராஜாவிடம், தி.மு.க., எம்.பி.,க்கள் பேசக்கூட இல்லையென கூறுகின்றனர். ஆனால், ராஜாவிடம், "தி.மு.க., எம்.பி.,க்களின் கூட்டத்தை தலைவர் கூட்டுகிறார்.
வா... சென்னை போகலாம்' என்று, தமாஷ் செய்து, கோர்ட் வளாகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இதெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு எப்படி தெரியும்? இதுபோல ஏதாவது வதந்திகளை பரப்பி, அதன் மூலம் மகிழ்ச்சியடையும் கூட்டத்தினர் செய்யும் வேலை தான், இதுபோன்ற செய்திகள்.
மே 13, சட்டசபை தேர்தல் தீர்ப்பு; மே 14, கனிமொழி ஜாமின் மீதான தீர்ப்பு... இரண்டும் தி.மு.க.,விற்கு நிம்மதி அளிக்குமா?மே 13, வெளியாகும் தேர்தல் முடிவுகளில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மே 14, ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கும். இரண்டு தீர்ப்புகளும், தி.மு.க.,விற்கு சாதகமாகவே இருக்கும்.
தி.மு.க.,வின் முழு கவனமும், கனிமொழி வழக்கு தொடர்பாகவே இருப்பதால், கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிட்டனவா?சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக, முகவர்களை நியமிக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம். கட்சியின் தலைவர் முதல், அடிப்படை தொண்டர் வரை, கட்சியின் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமொழி வழக்கு விவகாரம், எந்த வகையிலும் கட்சி நடவடிக்கைகளை பாதிக்கவில்லை.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், காங்கிரஸ் பார்வையாளராகவே உள்ளதே?ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தேவையான நேரத்தில் தேவையான பதில்களை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். தி.மு.க., தலைவரை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அரசியல் நிலவரங்கள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பார்வையாளராக உள்ளதென்று எப்படி கூற முடியும்?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள கலைஞர் "டிவி'யை மூட உத்தரவிட வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறுகிறாரே?சட்டத்திற்கு புறம்பாகவும், பல்வேறு முறைகேடுகளை செய்தும், துவங்கப்பட்ட ஜெ.ஜெ., "டிவி' மூடப்பட்ட சம்பவம் போல, கலைஞர் "டிவி'க்கும் நடக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவருக்கு கிடைத்த தண்டனை, ஏற்பட்ட துன்பங்கள், மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார். அவரது ஆசை பலிக்காது; அவரது எண்ணம் ஈடேறாது.
தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?சட்டசபை தேர்தல் முடிவில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற போகிறது. தமிழகத்தில் அமையப்போகும், தி.மு.க., அமைச்சரவையில், யார் யாரை அமைச்சராக நியமிக்கலாம் என்று கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
Mohamed bilal - Thanjavur,இந்தியா
2011-05-11 05:15:17 IST Report Abuse
"டில்லி சிறப்பு கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட ராஜாவிடம், தி.மு.க., எம்.பி.,க்கள் பேசக்கூட இல்லையென கூறுகின்றனர். ஆனால், ராஜாவிடம், "தி.மு.க., எம்.பி.,க்களின் கூட்டத்தை தலைவர் கூட்டுகிறார். வா... சென்னை போகலாம்' என்று, தமாஷ் செய்து, கோர்ட் வளாகத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்." இதுக்கு நீங்க பேசாமலே இருந்திருக்கலாம். இத விட ஒரு மனுஷன நக்கல் பண்ண முடியுமான்னு எனக்கு தெரில.
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-05-11 02:13:29 IST Report Abuse
இன்னும் 48 மணி நேரத்துக்கு உங்கள் கற்பனைக்கு வந்த எதையும் கூற உங்களுக்கு உரிமை உள்ளது. என்ஜாய்!!! டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே!!! எம் பி பதவியை துறந்து விட்டு உங்கள் கற்பனை அமைச்சரவையில் நீங்கள் தான் மின்சாரத்துறை அமைச்சரோ? பார்த்து!!! சென்னையிலும் இப்போது power cut. அதனால் உங்களுடைய தூக்கமும் கற்பனையும் கட் ஆகபோவதை நினைத்தால் --
Matt pillai - nashville,tn ,யூ.எஸ்.ஏ
2011-05-11 01:27:31 IST Report Abuse
ஜெயலலிதா நினைக்கிறார்........:தனக்கு கிடத்த தண்டனை போல் மற்றவர்களுக்கும் கனிமொழிக்கும் கிடைக்க வேண்டும் என்று.....நாட்டின் மேல் பற்றுள்ள ...ஏழை எளியவர்களின் மேல் பற்றுள்ள எல்லோரும் அதையே...நினைகிறோம்....,,அரசியல் என்ற பெயரில் பதவியை துச்ப்ரயோகம் பண்ணி கொள்ளையடி்ணகிரவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று.. ..அது ஜெயலலிதாவாக இருந்தாலும் .......யாராக இருந்தாலும்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக